/ கவிதைகள் / தெரிந்தெடுத்த சுரதா கவிதைகள்

₹ 200

தமிழ்க் கவிதைகளின் உவமைகளின் சிகரம், சுரதா. அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு இது. இதில், இயற்கை மட்டுமின்றி, புத்தர், காந்தி, விவேகானந்தர் போன்ற தத்துவ ஞானிகள், நேரு, காமராஜர் போன்ற அரசியல்வாதிகள், சீதக்காதி, பாண்டித்துரை, பாஸ்கர சேதுபதி போன்ற வள்ளல்கள், உமறுப்புலவர், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சாமிநாத ஐயர், ஞானியார் அடிகள், மறைமலை அடிகள், திரு.வி.க., பாரதி, பாரதிதாசன் போன்ற கவிஞர்கள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்தும் கவிதை எழுதியுள்ளார்.‘படுத்திருக்கும் வினாக்குறி போல் மீசை வைத்த பாண்டியர்; பாரதம் ஓட்டிய பாரதி; பழமையை பார் அதம் செய்கிறேன் என்ற பாரதி; இமை நெறித்து வானத்தில் அடக்கி; கொஞ்சம் இருள் கிடக்கும் பார்வையிலே வாங்கி’ என்பன போன்ற உவமைகளை இவர் பயன்படுத்தியுள்ளது, ஒரு பானை சோற்றுக்கு மூன்று சோறு பதம்.


புதிய வீடியோ