/ ஆன்மிகம் / திருமந்திர நெறி
திருமந்திர நெறி
25 பீட்டர்சு சாலை, சென்னை-14. (பக்கம்: 176) "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்/தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே என்று தன்னுடைய அவதார ரகசியத்தை உணர்த்தும் திருமூலர் அருளிய திருமந்திர நெறிகளை திறம்பட இந்நூலில் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர்.கேசரியோகம், பரியங்கயோகம், சந்திரயோகம், மந்திரயோகம், ஞானயோகம் பற்றிய விரிவான விளக்கங்கள் திருமந்திர மகிமையை எளிதில் புலப்படுத்துகின்றன.இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ள இந்நூல், இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றதொரு நன்னெறியை திருமந்திரம் கொண்டுள்ளதை நயம்பட உரைத்துள்ளது சிறப்பாகும்; பயனுள்ள விளக்க நூல்.