/ ஜோதிடம் / திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமணம் நடத்துவதற்கு பொருத்தம் பார்ப்பது பற்றி விளக்கும் நுால். இது ஆயிரம் காலத்து பயிர் என்பர். இந்த பழக்கம் தொன்மை காலத்திலே தொல்காப்பியம் தெளிவாக வரையறுத்துள்ளதாக கூறுகிறது. ஜோதிட சாஸ்திரங்களை முன் வைத்து, திருமணத்திற்கு 21 பொருத்தங்களை ஆராய வேண்டும் என உரைக்கிறது. மிக முக்கியமாக 10 பொருத்தங்களை முதன்மையாக கூறுகிறது. நட்சத்திர பொருத்தத்தின் அவசியம் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. நாம நட்சத்திர அட்டவணை வியக்க வைக்கிறது. சப்த கிரக குணபாவ விளக்க பட்டியலும், அதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எந்த ராசிக்கு எவை வசிய ராசிகள் என்ற தகவலும் உள்ளது. ஜோதிட வழிகாட்டி நுால். – டாக்டர் கார்முகிலோன்