/ ஆன்மிகம் / திருநாவுக்கரசர் தேவாரம்
திருநாவுக்கரசர் தேவாரம்
திருநாவுக்கரசர் தேவாரத்தின் ஆறாம் திருமுறை பாடல் களுக்கு உரை விளக்கம் தரும் நுால். இதில், 99 பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு தலத்தின் வரலாற்றுச் சிறப்பை கூறுகிறது. இறைவன், இறைவி திருநாமங்கள் தரப்பட்டுள்ளன. தல மரமும், ராகமும் குறிக்கப்பட்டுள்ளது.கோவில் என்று அழைக்கப்படும் தில்லை மாநகரம், இன்று சிதம்பரம் என்ற பெயரில் வழங்கப் படுகிறது. பெரும்பற்றப் புலியூர் என்ற பெயரும் சிதம்பரத்தையே குறிக்கும். சிதம்பரத்தின் பெருமையை முதல் பதிகம் எடுத்துக் கூறுகிறது. ‘அரியானை’ என்ற சொல்லிற்கு மெய்யடியார்க்கு அன்றி மற்றவருக்கு அறிதற்கு அரியவன் என்று பொருள் கூறுகிறது. உண்மையான அடியாரால் தான் இறைவனை உணர முடியும் என பொருள் தரப்பட்டுள்ளது. தேவாரப் பாடல்களுக்கு உரை உள்ளது. இனிய தமிழில் எளிய நடையில் வழங்கப்பட்டுள்ள நுால். – புலவர் இரா.நாராயணன்