/ ஆன்மிகம் / திருத்தொண்டர்களின் இறையனுபவம்
திருத்தொண்டர்களின் இறையனுபவம்
இறையனுபவம் பெற்ற திருத்தொண்டர்களின் வாழ்வை எடுத்துரைக்கும் நுால். பல்வேறு காலக் கட்டங்களில் வாழ்ந்த, 22 பேர் பற்றி உள்ளது. இறைவன் திருவருள் பெற பக்தியே பிரதானம் என்பதை மனதில் பதிக்கிறது. நான்கு நாயன்மார்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. பாகுபாடு இன்றி எல்லோரும் இறைவன் திருவடியை அடைய முடியும் என உணர்த்துகிறது. ஆழ்வார்களின் பக்தி பெருமையை மிக தெளிவாக எடுத்துரைக்கிறது. சிவ வழிபாட்டுடன், பெண்கள் உயர்வுக்காக போராடிய அக்கம்மாதேவி, அரவிந்தர் அன்னை வாழ்க்கை சுருக்கமாக தரப்பட்டுள்ளன. பாபநாசம் சிவன், ஹரிகேசநல்லுார் முத்தையா பாகவதர், கவிக்குஞ்சர பாரதி மற்றும் நாராயணகுருவின் அர்ப்பணிப்பு பற்றியும் தெளிவாக்கும் நுால்.– ராம்