/ தமிழ்மொழி / திருவள்ளுவரின் கடவுள் கொள்கை

₹ 80

வள்ளுவரின் இறை கொள்கைகளை எடுத்துக்கூறும் நுால். எந்த குறளிலும் கடவுள் என்ற சொல்லை பயன்படுத்தாமல் ஒரு அதிகாரத்தில் மட்டும் அந்த சொல்லைப் பயன்படுத்தி உள்ளதை குறிப்பிடுகிறது. இறைவன் என்ற சொல்லை மன்னனை குறிக்க பயன்படுத்தி உள்ளது பற்றி குறிப்பிடுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் ஆதிபகவன் - சூரியன், வாலறிவன்- துாய அறிவை உடையவன் என காட்டுகிறது. அறவாழி அந்தணன்- அறக்கடல், எண்ணிலா நற்குணங்களை உடையவன் என புதிய கோணத்தில் சிந்தனைக்கு பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இறை நிலையை உணர்த்திய வள்ளுவர் நேரடியாக அந்த சொல்லை பயன்படுத்தியுள்ள விதம் சுட்டப் பட்டுள்ளது. வள்ளுவரின் இறை கொள்கை பற்றிய ஆய்வு நுால். – புலவர் சு.மதியழகன்


சமீபத்திய செய்தி