/ இலக்கியம் / திருவாசகம் மூலமும், உரையும்
திருவாசகம் மூலமும், உரையும்
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:376 டெம்மி). காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க வைப்பவை திருவாசகப் பாடல்கள். இவற்றை ஓத, ஓத உங்கள் மனம் மேலும், மேலும் கனியும், கரையும். ஒரு கட்டத்தில் அந்த மனம் காணா மலும் போய்விடும். அந்த நிமிடத்தில் உங்களுக்கு ஆத்ம தரிசனம் கிட்டும். அப்போது கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டிருக்க மாட்டீர்கள். இத்தகைய திருவாசகத்திற்கு, மாணிக்க வாசகரின் மனநிலையைப் பிறழ்ந்துவிடாத உரை ஒன்றை, எளிய தமிழில் வழங்கியுள்ள ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.