/ தமிழ்மொழி / திருவாசகம்

₹ 240

பக்கம்: 472 ஆசிரியர் சைவ சித்தாந்த மணி. மறைந்து பலஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மொழிக்கு அருந் தொண்டாற்றிய ஆசிரியர் எழுதிய திருவாசக உரை மூன்றாம் பதிப்பாக மலர்ந்திருக்கிறது."தென்னாடுடைய சிவனை நேரில் கண்டு, அவரை கூலியாளாக்கி, வைகைக் கரையில் நடக்க வைத்து, அணுஅணுவாக ரசித்து பெருமை பெற்றவர் மணிவாசகர். "கல் நாருரித்தென்ன என்னையுந்தன் கருணையினாற்/ பொன்னார் கழல்பணித் தாண்டபிரான் எனத் திருத் தெள்ளோணத்தில் மணிவாசகர் பாடல் உண்டு. அதற்கு, கல்நார் உரித்தல் என்பது அரியதோர் செய்கை, அது போல, தமது கடின நெஞ்சில் அன்புண்டாக்குதல் அரிய செய்கை என்றார். இதேபோல, சிறந்த உரைச் சிறப்புகளைக் காணும்போது, உரையாசிரியரின் ஆழங்கால்பட்ட அறிவு புலப்படும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை