/ கதைகள் / திட்டம் 6

₹ 250

அறிவியல் வளர்ச்சியை பின்னணியாக கொண்டு கற்பனை கதாபாத்திரங்களால் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். மனித சமூகத்தின் நீண்ட பயண செயல்பாடுகளை முன்வைத்து புனைவாக எழுதப்பட்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியை முன்வைத்து, அது சார்ந்து புனைவுடன் கதாபாத்திரங்களை உருவாக்கி காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பத்தால் மனித குலம் நெருக்கடிக்கு உள்ளாகும் என்ற மையக்கருத்தை முன்வைக்கிறது. அறிவியல் தொழில் நுட்பங்கள் உலக அளவில் ஏற் படுத்தும் மாற்றங்கள், அதனால் ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை குறித்து கற்பனையுடன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. புராண பின்னணியுடன் பிரம், மகா, சிவ் என கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில் நுட்பம் நெருக்கடி தரலாம் என்ற ஊகத்தில் அமைந்த கதை நுால். – ராம்


முக்கிய வீடியோ