/ ஆன்மிகம் / திரேதாயுக இராமாயணம்

₹ 200

திரேதாயுகத்தில் நிகழ்ந்த ராமாயணத்தை நாடக வடிவில் தரும் நுால். ரகு குலத்தில் ராமன் தோன்றிய நாள், கோள் பற்றி விவரிக்கிறது. அநீதி, அக்கிரமம், கொடுமையை ஒழிப்பது, அதே சமயம் அறம், நலம், இன்பம் பெருகுவதை மையமாகக் கொண்டுள்ளது. வால்மீகி, கம்பர், துளசிதாசர் தந்த ராமாயணத்தை கொண்டு நாடகப் பாங்கில் எளிய நடையில் தந்துள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உயர்த்துவதை குறிப்பிடுகிறது. முதல் காட்சி, கைகேயி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியோடு துவங்குகிறது. கைகேயி மனத்தை மந்தாரை மாற்றுவது நயம்பட உரைக்கப் பட்டுள்ளது. ராமனுக்கு முடிசூட்டிய நிகழ்ச்சியோடு நிறைவடைகிறது. ராமன் வரலாற்றை சிறுவர் – சிறுமியர் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்த நாடக நுால். – புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை