/ சுய முன்னேற்றம் / துணிஞ்சா சாதிக்க முடியும்
துணிஞ்சா சாதிக்க முடியும்
சுய முன்னேற்றச் சிந்தனைகள் அடங்கிய நுால். செயலில் நம்பிக்கை, ஆற்றல் வளர்த்தல், சொல்லாற்றல், உணர்வுகளின் மேலாண்மை, தேடல், நேரப்பங்கீடு, பேச்சுக்கலை, கூட்டு முயற்சி, தலைமைப் பண்பு போன்ற தலைப்புகளில் சுய முன்னேற்றத்துக்கு வழிகாட்டப்பட்டு உள்ளது. எதிர்நீச்சல் போடுவதும், போராடுவதும் சாதனையாளர் தனிக்குணம் என வரையறுக்கிறது. வீழும் போதெல்லாம் எழுவதுதான் வெற்றி என்கிறது. சோதனை கடந்து சாதனைக்கு வழி சொல்கிறது. உழைப்பே தெய்வம்; உண்மையே வழிபாடு, மனச்சிறகு விரித்தால் வெற்றிக் கனி பறிக்கலாம் என கல்வெட்டாக பதியவைக்கிறது. துணிந்து சாதிக்க வழிகாட்டும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்




