/ சமயம் / துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்
துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள்
நாகை வழக்கறிஞர் என்.பி.சுப்ரமணிய சர்மாவால் மொழி பெயர்க்கப்பட்டு, மகாகவி சுப்ரமணிய பாரதியாரால் பார்வையிடப்பட்டு, புதுவை நா.சு.ராஜராம சர்மாவால் வெளியிடப்பட்ட (1914) நூலின் பதிப்பாக்கம் இது. உபநிஷதங்களின் சுலோகங்களை தமிழில் மொழி பெயர்த்து வழங்கும் பணியில், முனைவர் நல்லூர் சா.சரவணனின் பங்களிப்பு அதிகம். நான்கு வேதங்களுக்குள் காணப்படும் பன்னிரு உபநிஷதங்களையும் வேதங்களின் அடிப்படையில் உள்ளடக்கி வரிசைப்படுத்தி தொகுத்துள்ளது பாராட்டுக்குரியது. மேலும், சமஸ்கிருதம் தெரியாதவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் சுலோகங்கள் தமிழில் உள்ளது மகிழ்வளிக்கிறது. ஸ்ரீசங்கர பாஷ்யத்தின் சாராம்சமும் சுருக்கமாக இடம் பெற்றுள்ளது. நூறு ஆண்டுகளுக்குப் பின் புதிய பதிப்பாக உபநிடதங்கள் வெளிவந்துள்ளதன் மூலம் அவற்றின் முக்கியத்துவத்தை உணர வைக்கிறது.- ஜனகன்