/ வாழ்க்கை வரலாறு / திப்பு சுல்தான்
திப்பு சுல்தான்
திப்பு சுல்தான் வாழ்வில் நிகழ்ந்த வீரச்செயல்களை விளக்கும் நுால். வெள்ளையரை எதிர்த்த திப்பு சுல்தான், மது விலக்கை கொண்டு வந்த சாதனையை குறிப்பிடுகிறது. பெண்களுக்கு உடை சீர்திருத்தம், பல மதத்தவரை ஒரே சமூகமாக்கியது என பல சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. திப்பு சுல்தானுக்கு எதிராக நடந்த சதி மற்றும் உடன் இருந்தோரே காட்டிக் கொடுக்க முயன்ற செயல்களை விளக்குகிறது. ஒரு சர்வாதிகாரியின் ஜனனம், குள்ள நரியும் வெள்ளைக் கொக்குகளும் போன்று சுவாரசியமான தலைப்புகளில் தகவல்களை தருகிறது. சுதந்திர வரலாற்றின் ஒரு பகுதியை அறிய துணை நிற்கும் நுால். – புலவர் ரா.நாராயணன்