TNPSC பொதுத்தமிழ்
அறிவுக்கடல் பதிப்பகம், மனை எண்: 4693, டி.என்.எச்.பி., குடியிருப்பு, வில்லாபுரம், சுப்பிரமணியபுரம் (அஞ்சல்), மதுரை-625011. (பக்கம்: 384+455) அரசுப்பணி தற்காலத்தில் மிகுந்த போட்டிகளுக்கு இடையே தான் கிடைக்கிறது. டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, பள்ளிப் படிப்பறிவு மட்டும் போதாது. பொதுஅறிவுத் தேர்ச்சியும் வேண்டும். இதுபோன்ற நூல்கள், அப்போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற மிகவும் உதவும். பொதுத்தமிழ் என்றும், பொது அறிவு என்றும் இரு நூல்களாக வெளியிட்டுள்ளனர். பொதுத்தமிழ் 20 அலகுகளில் விளக்கப்படுகிறது. இவ்வலகுகளில் பொருந்தா சொல்லை கண்டறிதல், பிழை திருத்தம், தமிழ்ச்சொல் அறிதல், வேர்ச்சொல்லை தேர்வு செய்தல், இலக்கணப் பகுப்பறிதல் முதலியன மிகவும் இன்றியமையாதன. பொது அறிவு நூலில் 12 பிரிவுகள் உள்ளன. அனைத்தும் தேர்வுக்கு இன்றியமையாதன. பொதுத் தமிழ் நூலின் பக்கம் 31ல், மகாபாரதம் நூலாசிரியர், வில்லிபுத்தூரார் என்றிருக்க வேண்டும். இரு நூல்களிலும், பல சந்திப்பிழைகள் உள்ளன. தேர்வுக்கு உதவும் நூல்களில் பிழைகள் இருப்பது சரியல்ல.