/ கட்டுரைகள் / அரசு அலுவலகங்களில் இலஞ்சம் தராமல் செயல்களை முடிக்க...

₹ 70

விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல் தொகுப்பு நுால். அரசு அலுவலகங்களில் லஞ்சம் தராமல் செயல்களை முடிக்கும் சூட்சுமம் சொல்லப்பட்டிருக்கிறது. இது குறித்து, 21 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொன்றும், ஒவ்வொரு விஷயத்தை தனித்துவமான பார்வையுடன் முன் வைக்கின்றன. லஞ்சத்தை எதிர்த்து புகார் தரும் முன், முன்னெச் சரிக் கையாக செய்ய வேண்டியது, லஞ்சம் பெற்றவர் கைது செய்யப்படும் செய்தி, அதற்கு வழங்கப்படும் தண்டனை விபரங்களும் எடுத்து சொல்லப்பட்டுள்ளன. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுகளின் முகவரி தரப்பட்டுள்ளது. விசாரணை, புலனாய்வின் தன்மை, பொறி வைத்துப் பிடித்தல் போன்ற அடிப்படை கேள்விகளை விளக்கி தெளிவுபடுத்தும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை