/ ஆன்மிகம் / ஆழ்வார் பன்னிருவர்
ஆழ்வார் பன்னிருவர்
பன்னிரு ஆழ்வார்களின் வரலாற்றை விரிவாக கூறும் நுால். ஆழ்வார்கள் 10 பேர் என்று வழங்கப்பட்ட, ‘உபதேச ரத்தினமாலை’ என்ற நுாலில் உள்ள செய்தியுடன், மதுரகவியாழ்வார், ஆண்டாளுடன் பன்னிரு ஆழ்வார்கள் என கூறப்பட்ட வழக்கத்தை பதிவு செய்துள்ளது. ஆழ்வார்கள் வரலாறும் விரிவாக உள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ள நுால்கள், பாடல்களின் எண்ணிக்கை உட்பட விபரங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. ராமானுஜ நுாற்றந்தாதியின், 108 பாடல்களையும் சேர்த்து நாலாயிரம் என கணக்கிடும் முறை விளக்கப் பட்டுள்ளது. திருத்தலங்களின் சீர்மிகு வரலாறும், புராண நிகழ்வுகளும் சுவைபட தரப்பட்டுள்ளன. ஆழ்வார் குறித்து ஆய்வு செய்வோருக்கு பயன்படும் நுால். – புலவர் சு.மதியழகன்