/ வரலாறு / உண்மை நின்றிட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
மகாகவி பாரதி பற்றி கட்டமைக்கப்பட்ட வரலாற்று பதிவுகளின் உண்மை தன்மையை ஆராய்ந்துள்ள நுால். பாரதியின் படைப்பு கோட்பாடு, முன்னெடுப்புகள் பற்றி உருவாக்கிய பிம்பங்களை மறுதலிக்கிறது. பாரதி வாழ்க்கையில் நடந்தவற்றை வரலாற்றில் பதிவு செய்தோர் கூற்றில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டுகிறது. செவி வழி செய்தியால் வரலாறு புனையப்பட்டிருப்பதை முன்வைக்கிறது. பாரதி படைப்புகளில் உள்ளார்ந்து இழையோடுவதை ஆராய்ந்து ஏற்கப்படக்கூடிய வாழ்க்கை குறிப்புகளை தர முற்படுகிறது. பாரதியின் இளமைக்காலம் முதல் மறையும் வரையிலான சிந்தனைகள், செயல்பாடுகளில் மேலோங்கி காணப்பட்டவற்றை பதிவு செய்துள்ளது. பாரதி என்ற ஆளுமையை புனரமைத்து காட்டும் அரிய பெட்டகமாக உள்ள நுால்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு




