/ தமிழ்மொழி / உண்மை விளக்கம் உரை நுால்
உண்மை விளக்கம் உரை நுால்
திருவதிகை மனவாசகங்கடந்தார் அருளிய, உண்மை விளக்கத்துக்கு உரை தரும் நுால். செய்யுளின் பொருளை புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்கிறது. தேவார திருமுறைகளையும் மேற்கோள் காட்டி தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஆணவம், கன்மம், மாயை என்னும் பாசங்களை நீக்கி ஆன்மாவாகி, பதியை அடையும் நிலை விவரிக்கப்பட்டுள்ளது. பிரகிக்கிருதி மாயையில் தோன்றும் ஆன்ம தத்துவங்கள், அசுத்த மாயையில் தோன்றும் வித்தியா தத்துவங்கள், சுத்தமாயில் தோன்றும் சுத்த தத்துவங்கள், நாதன் புரியும் ஆடல்கள், ஐந்து எழுத்து மந்திர பயன்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சைவ அன்பர்கள் படிக்க வேண்டிய நுால். – புலவர் சு.மதியழகன்