/ கதைகள் / முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு
முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு
ஏழைகளின் துயரத்தை மையமாக கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘மவுனத்தின் வலிகள்’ என்ற படைப்பு போர் குறித்தும், அதனால் குழந்தைகள் கொல்லப்படுவதையும் நினைவூட்டுகிறது. லட்சியம் நிறைவேறாமல் தவிக்கும்போது, புத்தகம் ஆறுதல் கொடுப்பதை, ‘முகிலன்’ கதை சுட்டிக்காட்டுகிறது. உடன்பிறந்த அக்கா உழைப்பில் வாழ்ந்த தம்பிகள் பற்றிய, ‘மீளா துயரம்’ கதை, பாசத்தை பறைசாற்றுகிறது. பெண்ணுக்கு வலிமை அதிகம் என, ‘அவளும், உளவியலும்’ கதை தோலுரிக்கிறது. ரயில் பயண உரையாடல் வாயிலாக நடக்கும் அன்பின் பரிமாற்றத்தை, ‘முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு’ கதை உணரச் சொல்கிறது. எளிமைக்கு எதிராக பொய்யாடை போர்த்தும் மனிதர்களை அம்பலப்படுத்தும் நுால். – டி.எஸ்.ராயன்




