/ கதைகள் / உதயபானு - கான்மலர்

₹ 410

தமிழகத்தில் மூவேந்தர் குறித்த வரலாற்று நாவல் நுால். மூவேந்தரிடையே இருந்த அரசியல் உறவு, பகை, முரண், வணிக நிலைப்பாடு பற்றிய காட்சிகள், அரிகேசரி பராங்குச பாண்டியன் சார்ந்த குறிப்புகள், ஆதித்த கரிகாலன் மோதல்கள், அக்காலத்தில் நிலவிய போர் அறத்தை கண் முன் காட்டுகிறது. கணவாய், வணிகப்பாதை, சேர நாட்டு நிலப்பரப்பில் வரும் வழித்தடங்கள், வயல்வெளி பற்றிய வருணனைகள் கவர்கின்றன. மேற்கு தொடர்ச்சி மலை, தென்மலை விவரிப்புகளில் வெளிப்படும் சொல்லாட்சி ஈர்க்கிறது. கேரள நிலவியலோடு கூறப்படும் பண்பாட்டு சூழல்கள், விழிஞம், காந்தளூர் சாலை காட்சிகள் அக்கால சூழலுக்கே இட்டு செல்கின்றன. இயல்பான உரையாடல்களுடன் அமைந்த நாவல். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி