/ கதைகள் / உயிர் ஆடும் திகிலாலே...
உயிர் ஆடும் திகிலாலே...
மரணம், அதற்கு முன் திருமணம், அதற்கும் முன் காதல் என நடப்பு கதையில் இருந்து முன்பு நடந்தவற்றை கதையாக தரும் நுால். பொழுதுபோக்கும் நவீனம் தான் என்றாலும் பொதுவான நடையழகு உள்ளது. படிக்கும் பொழுது அடுத்து என்ன நடக்குமோ என்று பதற்றம் தோன்றுகிறது. இதற்கு எழுத்து நடையும், கதை போக்கும் காரணமாக உள்ளது.நடிகை என்றால் திரைப்படத்தில் நடித்து தான் ஆக வேண்டும். இதை புரிந்தவன் தான் நடிகையை காதலிக்க வேண்டும்; கைப்பிடிக்க வேண்டும். இல்லையென்றால் சந்தேகத்தின் பிடியில் சிக்கி தத்தளிக்க வேண்டியது தான். கதை மாந்தர்களின் குணங்கள் நல்லபடியாக இருப்பதால் சுபமாக முடிகிறது.– சீத்தலைச் சாத்தன்