/ வரலாறு / வடகிழக்கு இந்தியா

₹ 350

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த நுால். அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மேகாலயா, சிக்கிம், திரிபுரா, உத்தரகண்ட் மாநிலங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. கூடுதலாக நேபாளம் மற்றும் பூடான் நாடு பற்றியும், அவை நம் நாட்டுடன் கொண்டுள்ள உறவு குறித்த செய்திகளும் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் தொன்மை சிறப்பு, வரலாற்று பின்னணி, வளங்கள் குறித்த தகவல்கள் உள்ளன. வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் குறித்து ஒரு கட்டுரை உள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவம், வீர செயல்பாடு, பண்பாடு, கலாசார பெருமையை தெளிவாக தருகிறது. இந்திய வடகிழக்கு பகுதியை வரலாறு, சமூகவியல் ரீதியாக அறிந்து கொள்ள உதவும் நுால். – ராம்


சமீபத்திய செய்தி