/ கட்டுரைகள் / வையை ஆண்டு மலர் 2024
வையை ஆண்டு மலர் 2024
இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். துறை சார்ந்த வல்லுனர்கள் எழுதிய, 22 ஆக்கங்களை உடையது.முதலில் நீரியல் தொழில் நுட்ப விபரங்கள் அடங்கிய படைப்பை அடுத்து, உலக அளவில் விதையின் சந்தை மதிப்பு பற்றி விரிவாக குறிப்பிடுகிறது ஒரு கட்டுரை. இயற்கை உணவின் மேன்மையை உணர்த்துகிறது ஒரு படைப்பு. புதுப்பிக்க வல்ல எரிசக்தி வளத்தின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.பாரம்பரிய முறையில் காடுகளை பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை மருத்துவம், தமிழகத்தில் வளரும் தாவரங்கள், விவசாயம் சார்ந்த வாழ்வியல், இயற்கை மருத்துவர் போல் செயல்படும் விதம் குறித்தெல்லாம் விபரங்கள் உள்ளன. ஆரோக்கிய உலகுக்கு வழிகாட்டும் நுால்.– ஒளி