/ அரசியல் / வாக்காளரின் வலிமை
வாக்காளரின் வலிமை
இந்திய தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமின் முக்கியத்துவம் குறித்து கூறும் நுால். தேர்தலின் அடித்தளம், துல்லியமான வாக்காளர் பட்டியல் என்பதை வலியுறுத்துகிறது. தகுதியானோர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற, தீவிர திருத்தம் உதவுவதாக வழி மொழிகிறது. வாக்காளர் பட்டியலில் தவறு இருந்தால், தேர்தலில் நியாயத் தன்மையே கேள்விக்குறியாகும் என வாதிடுகிறது. தீவிர திருத்த சிறப்பு முகாம் செயல் முறைகள், மக்கள் பங்கேற்பு, ஆதார குணங்கள், முயற்சியின் நேர்மையான தாக்கம், தவறான குற்றச்சாட்டுகளுக்கு பதில் மற்றும் நேரடி கள அனுபவங்களை அறிய தருகிறது. இந்த பணி ஒரு ஜனநாயக பாடம் என்று அறிவிக்கும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து




