/ சிறுவர்கள் பகுதி / வளரும் பயணம்
வளரும் பயணம்
வாழ்வின் அடிப்படை பற்றி சிறுமியருக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். வளர் இளம் பருவத்தில், 14 வயதுடைய சிறுமியருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. மாதவிடாய் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் தகவல்கள் நிறைந்துள்ளன. சுய பாதுகாப்புக்கு உரிய அறிவுரைகள், விழிப்புணர்வு தகவல்களும் உள்ளன. சிறுமியர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைந்துள்ளன. தாயும், மகளும் உரையாடுவது போன்று எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. பெண் உடலில் பதின்ம பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. உடலின் இயக்கம் குறித்து முழுமையாக அறிந்துகொண்டால் தான், பெண்கள் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க முடியும் என்று உணர்த்தும் நுால். – சிவா




