/ அறிவியல் / வானவில் மரம்

₹ 150

அறிந்த தாவரங்கள் குறித்து அறியாத தகவல்களை முழுமையாக தரும் நுால். சுற்றுச்சூழல் குறித்த அறிவை மேம்படுத்தும் வகையில் உள்ளது.இயற்கையின் பெருங்கொடை உள்ளது நம் நாடு. பல வகை தாவரங்கள் நம்மை சுற்றியுள்ளன. அவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த புத்தகம். தாவரங்கள் குறித்த முறையான, முழுமையான அறிவு தொகுப்பாக மலர்ந்துள்ளது.உண்ணும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் பற்றிய தாவர குறிப்புகள் மிகத் தெளிவாக தரப்பட்டுள்ளன. நச்சு தாவரம், ஆக்கிரமிப்பு தாவரம், மயக்கமூட்டி தாவரம் என எச்சரிக்கை செய்யும் விதமாகவும் தகவல்கள் உள்ளன. உலகம் மரங்கள் அடங்கிய வனம் என்பதை தெளிவாக பதிவு செய்துள்ளது. தாவரங்கள் குறித்த அறிவூட்டும் அரிய நுால்.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை