/ வாழ்க்கை வரலாறு / வந்த பாதை – ஒரு பார்வை

₹ 600

எழுத்தாளர் ராணிமைந்தனின் சுயசரிதை நுால். நெகிழ்வும், கனிவும் நிறைந்த வாழ்க்கை பக்கங்கள் வனப்புடன் கோர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு என பல பொருண்மைகளில், 70 புத்தகங்கள் எழுதியவர் ராணிமைந்தன். திருக்கழுக்குன்றத்தில் பிறந்து, 80 வயது வரை வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை தொகுத்து பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு நகர்வும் வண்ணங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்வுகள் 68 பகுப்புகளாக தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பிலும் சுவையான செய்திகளுக்கு பஞ்சமில்லை. முக்கிய பிரமுகர்களை பேட்டி கண்டது, தனிப்பட்ட முறையில் பழகிய நிகழ்வுகள் எல்லாம் தரப்பட்டுள்ளன. சில நாட்கள் பழகியோரிடம் கூட பார்த்த உயர்ந்த பண்புகளையும் கூர்ந்து நோக்கி பதிவு செய்யப் பட்டுள்ள நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை