/ வரலாறு / வந்தே பாரத் வரலாறு

₹ 350

இந்திய ரயில்வேயில் சுயசார்பாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் வெற்றி வரலாற்றைக் கூறும் நுால். திட்டம் கருவாகி, உருவாகி சோதனைகளை கடந்து களம் கண்டதை கதைபோல் விவரித்துள்ளது. உருவாக்கிய குழுவை வழி நடத்தியவரின் சுயசரிதை போல் மலர்ந்துள்ளது.சென்னை ஐ.சி.எப்., நிர்வாகத்தின் ஒரு பிரிவு, இந்திய அதிவேக ரயிலை வடிவமைத்து, 2018ல் களம் இறக்கியது. அதன் சேவை, ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது பற்றிய முழுமையான விபரங்களையும் தருகிறது. சர்வதேச அளவில் இந்த ரயில் பெற்றுள்ள சிறப்பையும் விளக்குகிறது. இந்திய ரயில்பெட்டி தயாரிப்பு நிறுவன சாதனை வரலாற்றை விவரிக்கும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை