/ கதைகள் / வெற்றி நிச்சயம்!
வெற்றி நிச்சயம்!
வாழ்வில் வெற்றி பெற்றோரின் படங்களை அட்டைப்படமாக தாங்கி வந்திருக்கும் நுால். நீதிக் கதைகள் இளைய சமுதாயத்திற்கு அறிவை ஊட்டுகின்றன. தேவையற்ற வார்த்தையை உபயோகிக்கக் கூடாது என்பதை, ‘பாம்பும் தச்சுப்பட்டறையும்’ கதை, பொட்டில் அடித்தால் போல் சொல்கிறது. நடைமுறை வாழ்வை, ‘வாழை மரமாக அல்ல, சவுக்கு மரமாக சந்தோஷப்படுங்கள்’ என்ற வரி விளக்குகிறது. வழிகாட்டி யார் என்பதை கண்டுபிடித்தால் போதும், நிச்சயம் முன்னேறி விடலாம் என்று ஒரு கதை சொல்கிறது. பல விஷயங்கள் விதியால் நடப்பதை மதியால் உணர வேண்டும் என்ற மையக்கருத்தில் உள்ளன. உறவுகளை ஒட்ட வைத்துக்கொள்ள, ‘வைரமும் எலியும்’ கதை பாடம் சொல்கிறது. நல்ல போதனைகளுடன், வளரும் சமுதாயத்திற்கு உதவும் நுால். – சீத்தலைச்சாத்தன்