/ வாழ்க்கை வரலாறு / வெற்றிப் படிக்கட்டுகள்

₹ 150

கவிஞர் கவிதாசன் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து தரும் நுால். வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள், தடைகள், அவற்றை துணிவோடு எதிர்கொண்டு பெற்ற வெற்றிகள், தளர்ச்சியை மாற்றியமைத்த திருப்புமுனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்லாண்டுகளாக மாணவர்களுக்கு நடத்திய தன்னம் பிக்கை பயிலரங்குகள் பற்றிய தகவல்கள் உள்ளன. வாழ்க்கை பாதையில் கிடைத்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தியது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையுடன் உயர வழிகாட்டுதல்கள் தரப்பட்டுள்ளன. தலைமை பண்பை வளர்க்க வேண்டியதை வலியுறுத்துகிறது. கொண்ட கடமையில் கவனம் செலுத்தி நிறைவேற்றுவதில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை கூறுகிறது. முன்னேற உந்துதலை தரும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு