/ பொது / விஜயபாரதம்

₹ 100

"விஜய பாரதம் தீபாவளி மலர், இந்த ஆண்டு மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை, முதலில் குறிப்பிட்டுவிட வேண்டும். இரண்டு புத்தகங்கள். யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பாவின் ஆசியுரையுடன் ஆரம்பமாகும் இதழின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தால், மிகச்சிறந்த சான்றோர்களின் கட்டுரைகளின் அணிவகுப்பு. ம.பொ.சி., உ.வே.சா., பாரதியார், பரமஹம்ஸ யோகானந்தா எனப் பல பண்பாளர்களின் பங்களிப்பு. அறிவியல், ஆன்மிகம், இலக்கியம், பண்பாடு, கலாசாரம் என அனைத்துப்பிரிவுகள் பற்றிய கட்டுரைகள். நான்கு பிரமுகர்களுடன் நேர்காணல், அசோக மித்திரன் தொடங்கி ஆதலையூர் சூரியகுமார் வரை ஆகச்சிறந்த படைப்பாளிகள், பதினான்கு பேர்களின் சிறுகதைகள்.எட்டுக் கவிதைகள், கண்களைக் கவரும் வண்ணப் படங்கள். படித்து மகிழ பல நீதிக்கதைகள், பத்திரிகைகளின் தொகுப்பு. நாரதர் படக்கதை. விஷய கனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தீபாவளி மலரின் விலை, மிகக் குறைவு என்பதையும் சொல்ல வேண்டும்.


சமீபத்திய செய்தி