விநாயகர் பெருமை
பக்கம்: 176 இந்துக்களின் முழுமுதற் கடவுள் பிள்ளையார் என்று பலரும் கூறுவர். பிள்ளையாரின் பெருமை அளவிடற்கரியது. இந்நூலில் விநாயகரின் பெருமையை, 21 தலைப்புகளில் மிக அருமையாக தந்துள்ளார் நூலாசிரியர்.காலங்கடந்த கணபதி என்ற தலைப்பில் ஆசிரியர் விளக்கும் போது, ""புலிகேசி மன்னனைத் தோற்கடித்து ,நரசிம்மவர்ம பல்லவனுடைய தளபதி பரஞ்சோதி வாதாபியில் இருந்து கொண்டுவந்த சிலை தான் பிள்ளையார், என்று வாதிடுவோருக்கு தக்கபதிலைத் தந்திருப்பது நல்ல வாதம் (பக்கம் 8).பிள்ளையார் திருவுருவ தத்துவத்தையும், நோன்புகளையும், விரதங்களையும் விளக்குவதுடன், அயல்நாடுகளில் ஆனைமுகத்தோன் - அருகம்புல்லின் மகிமை - அஷ்ட கணபதி கோவில்கள் முதலியன குறித்து விளக்குவது நூலாசிரியரின் மதிநுட்பத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.விநாயக சதுர்த்தி எளிய பூஜாமுறை என்ற பகுதியும்,பிள்ளையார் தோத்திரங்கள் என்ற பகுதியும் பலருக்கு பயன் தரும்.