/ ஆன்மிகம் / விஷ்ணு ஆலயங்களின் பெயர் வரக் காரணங்கள்!
விஷ்ணு ஆலயங்களின் பெயர் வரக் காரணங்கள்!
முக்கிய விஷ்ணு கோவில்கள் பற்றிய நுால். ரங்கநாதர் பள்ளி கொண்ட ஸ்ரீரங்கத்துக்கு அவர் பெயரே வந்தது. மதுரகவி தவிர 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்றது. இங்கு, 12 ஆழ்வார் களுக்கும் சன்னிதிகள் உள்ளன. மூன்றடி நிலம் கேட்டு உலகத்தை அளந்த பெருமாளுக்கு கோவில்கள் உள்ளதை குறிப்பிடுகிறது. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருத்தலத்தில் திருஊரகம், திருக்காரகம், திருநீரகம், திருக்கார்வானம் என்ற திவ்ய தேசங்கள் ஒருங்கே உள்ளதை குறிப்பிடுகிறது. ஒவ்வொரு திருத்தல மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சமும் குறிப்பிடப்பட்டுள்ளன. வைணவ கோவில்கள் பற்றிய நுால். –- புலவர் சு.மதியழகன்




