/ கட்டுரைகள் / விதைத்தவர் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை...

₹ 120

தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். குட்டிக் கதைகளை படிக்கும் ஆர்வத்தை தருகிறது.முதலில் பென்சில் தரும் ஐந்து படிப்பினைகள் பற்றி குறிப்பிட்டிருப்பது ஆர்வத்தைத் துாண்டுகிறது. அன்பு என்ற சொல்லில் முதல் எழுத்து உயிர், இரண்டாவது மெய், மூன்றாவது உயிர்மெய் எழுத்தாக உள்ளது. எழுத்துகள் ஒற்றுமை நல்ல விளக்கமாக உள்ளது. வெட்டியதை ஒட்ட முடியுமா? துண்டு பண்ணுவதுஅரிய செயல் அல்ல; ஒன்றை உண்டு பண்ணுவதுதான் நல்ல செயல். இதுபோன்ற தத்துவங்கள் உள்ளன. புளியம்பழத்தில் பெற்றோருக்கு ஒரு பாடம் இருக்கிறது. இக்கனி சொல்வது வாழ்க்கைக்கு மிக தேவையாக உள்ளதால், படிக்க வேண்டிய புத்தகம். – சீத்தலைச் சாத்தன்


முக்கிய வீடியோ