/ பெண்கள் / விட்டு விடுதலையாகி...
விட்டு விடுதலையாகி...
பக்கம்: 408 இது ஒரு சமூக நவீனம் தான் என்றாலும், வரலாற்றுச் சிறப்புடையதாகவும் மிளிர்கின்றது. "மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்பது ஓர் உயரிய கருத்து வெளிப்பாடு. "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்பது ஓர் ஆவேசக் கருத்தின் குரல். சரி, மாதர் தம்மை எப்படியெல்லாம், இந்தச் சமூகம் ஒரு காலத்தில் இழிவு செய்து கொண்டிருந்தது? இந்த மூன்றின் கலவையாக - ஓர் நிதர்சனப் படப்பிடிப்பாக அமைந்த கதைக் களத்தில் தான், இக்கதை கட்டமைக்கப் பெற்றுள்ளது. கதாபாத்திரங்கள் கற்பனை என்றாலும், டாக்டர் முத்துலட்சுமியின் வார்படம் போன்ற நிஜ மாந்தர்களின் சாயலிலேயே, பல பாத்திரங்கள் உலவுகின்றன. அதன் காரணமாகப் புதினத்தின் கனம் கூடுகிறது எனலாம்.