/ விவசாயம் / விவசாய கடன்

₹ 120

வங்கிகள் வழங்கும் விவசாயக் கடன்களை பெறுவதற்கு முத்தாய்ப்புடன் வழிகாட்டும் நுால். விவசாயிகளுக்கு மத்திய – மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள கிஷான் கிரடிட் கார்டு, கிசான் தத்கல் கடன், தங்க நகைக்கடன், நீர்ப்பாசனக் கடன், நிலச்சீரமைப்பு வகைப்படுத்தல் கடன், குத்தகை விவசாயிகள் கூட்டாக பெறும் கடன் போன்றவை பற்றிய விபரங்கள் எல்லாம் எளிமையாக தரப்பட்டுள்ளன.டிராக்டர் வாங்குவதற்கான கடன், சாண எரிவாயு அடுப்பு கடன், கோழிப்பண்ணை நடத்துவதற்கான கடன், விளைபொருட்களை சேமிக்க சொந்தமாக குளிர்பதன கிடங்கு மற்றும் சேமிப்பு கிடங்கு அமைப்பதற்கான கடன், மீன் பண்ணை நடத்துவதற்கான கடன், சுய உதவிக் குழுவுக்கான கடன் என, பல்வேறு விபரங்களை உள்ளடக்கியுள்ளது. விவசாயத்தில் கடனை பயன்படுத்தி முன்னேற வழிகாட்டும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை