/ வாழ்க்கை வரலாறு / விவேகானந்தரின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
விவேகானந்தரின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்
ஆன்மிக செயல்பாடுகளால் உலகை வென்ற துறவி விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்வுகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சிறிய கதைகள் போல், 27 தலைப்புகளில் வடிக்கப்பட்டுள்ளது.குழந்தை தியானம், வண்டிக்காரன் உபதேசம், பள்ளியிலே துாங்குமூஞ்சி, விளையாட்டில் ஒரு விந்தை, அடங்கா பிசாசு, சாகும்போது மகாபாரதம், ெசண்பகமரத்து பேய் போன்ற ஆர்வமூட்டும் தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் சிறுவர் அறிவு விசாலமாகும் வகையில் போதனைகளை தருகின்றன. வாழ்வில் தன்னம்பிக்கையை ஊட்டி முன்னேற்றத்துக்கு வழியை காட்டும். புகழ் பெற்றவரின் வாழ்க்கையில் சுவையான நிகழ்வுகளின் தொகுப்பு நுால்.– மதி