/ கதைகள் / வியூகம்
வியூகம்
பரபரப்புக்கு பஞ்சமின்றி படிப்பவர் மனதை கட்டிப் போடும் வகையில் அமைந்த நாவல் நுால். ஒரு நிறுவனத்தில் வருமான வரித் துறை திடீர் சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகிறது. உடனே அவசரமாக கன்டெய்னர் லாரி ஒன்றில் பண நோட்டுகள் ஏற்றப்படுகின்றன. அப்படி இடம் மாற்றப்பட்ட 510 கோடி ரூபாய் களவாடப்படுகிறது. இதன் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளையை திட்டமிடுவதும், துணிச்சலுடன் நிறைவேற்றுவதும் தனி மனிதன் தான். அதிகாரம் படைத்தோர் ஆணிவேரை நீதிக்காக அசைத்துப் பார்க்க துணிகிறான். அவன் திட்டம் பலிக்குமா என்பதை குடும்பம், பாசம், நட்பு, காதல், அரசியல், நவீன தொழில் நுட்பம், கொலை, கொள்ளை, சாகசம் கலந்து படைக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பு குறையாமல் படைக்கப்பட்டுள்ள நாவல். – சிவா




