/ பொது / இயர் புக் 2011

₹ 120

சுரா காலேஜ் ஆப் காம்ப்படீஷன், 1620, ஜெ பிளாக், 16வது மெயின் ரோடு, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 950) சுரா பதிப்பகத்தார் 2011 ஆண்டுப் புத்தகம் வெளியிட்டுள்ளனர். மொத்தம் 950 பக்கங்களில், "முழு தலையணையாக வெளிவந்துள்ளது புத்தகம். தவறாக நினைக்க வேண்டாம், தலையணை என்று சொன்னதால்; அவ்வளவு விஷயங்கள் அடங்கிய புத்தகம்! அயோத்தி விவகாரம் முதல், ஹெய்தி பூகம்பம் வரை, "சூப்பர் பக் என்.டி.எம்.,-1 முதல் பி.எஸ்.எல்.வி., சி15 வரை அனைத்தையும், குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அள்ளி தெளிக்கப்பட்டுள்ள விஷயங்களாக உள்ளன. இடையிடையே "டாபி, சைகாம், இப்சா போன்ற சங்தேகக் குறியீடுகளும் உள்ளன. தேடி... தேடி... படித்தால், சுவாரசியம் தான். "புதியன மட்டும் தான்னு நினைக்க வேண்டாம்; அடிப்படையும், பழையதும் உண்டு என்பது போல், பழைய தலைவர்கள், தேசிய சின்னம், உலக பார்லிமென்ட்டுகள், தொழிற்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், இந்திய நகரங்கள், முன்னாள் கவர்னர்கள், பிரதமர்கள், ராணுவ, கடற்படை முதன்மை தளபதிகள் என அனைத்து விவரங்களும் உள்ளன. ஐ.ஏ.எஸ்., முதல் பள்ளி அரையாண்டு தேர்வு எழுதிபவர்கள் வரை, அனைவரும் வைத்திருக்க வேண்டிய புத்தகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை