/ ஆன்மிகம் / யோகமும் மனிதனின் நிலையும்
யோகமும் மனிதனின் நிலையும்
யோக முறைகளால் இறைவன் அறியப்படுகின்றான். சித்தர்கள் வழிகளும், வேதகால ரிஷிகளின் முறைகளும் ஒன்றுதான். இடைக்காலத்தில் தோன்றிய வழிகள் இதனை மாற்றி விட்டன. இந்த புத்தகம் யோக வழிமுறை, வேதகால ரிஷிகளின் வழி, சித்தர்களின் வழி மற்றும் அமரகவி சித்தேஸ்வரரின் வழிமுறைகளை உணர்த்தும் படியாக அமைந்துள்ளது. அமரகவி சித்தேஸ்வரர் என்பவரின் தத்துவம், ஆழ்நிலை யோகம் மற்றும் தியான மார்க்கத்தின் நிலைகள் ஆகியவற்றை விவரிக்கிறது இந்நூல். மூச்சை சீராக்குவதே யோகம். அதன் அடிப்படைத் தத்துவம், தேகத்தின் உணர்வு, யோகத்தின் பிடிக்குள் அகப்படும் நிலை, பரவச நிலையில் ஆழ்ந்த மூளை, அருள் வாக்காக மாறுவது எவ்விதம்? அதன் மூலம் கைவரப்பெற்ற ஆன்ம சக்தி எவ்வாறு நோய்களைத் தீர்க்க உதவுகிறது என்பதையெல்லாம் தெளிவாக விளக்கியுள்ளார்