Advertisement

வெற்றிகரமான திருமண வாழ்க்கை!


வெற்றிகரமான திருமண வாழ்க்கை!

₹ 175

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

திருமண வாழ்வில் திருப்தியற்ற நிலையில் இருக்கும் தம்பதியருக்கு புரிதல் ஏற்படுத்தும் உளவியல் ஆலோசனை நுால். கனவுகளும் யதார்த்தமும், பிடிவாதமும் தனித்துவமும், எதிர்பார்ப்புகளால் வழிநடத்தப்படும் வாழ்க்கை, திருமணத்தில் மூன்றாவது நபர், ஒன்றாக வாழும் அன்னியர்கள், மதுவால் மறையும் வாழ்க்கை, திருமண வாழ்கைக்கு திசைகாட்டி தேவை, நிலை ஆய்வு, திருமண வாழ்க்கையில் தனிமை, வளராத உறவு என்ற தலைப்புகளில் திருமணமான தம்பதியருக்குள் ஏற்படும் பிரச்னைகளை அலசுகிறது. சிக்கல்களை விடுவித்து வாழும் வகையில் உளவியல் ஆலோசனைகள் தரப்பட்டு உள்ளன. வாழ்க்கை போக்கை உணராமல், கனவுகளை எண்ணியபடி வாழும்போது ஏராளமான பிரச்னைகள் வரும் என உண்மை சம்பவங்கள் மூலம் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. அவற்றை எப்படி எல்லாம் தீர்க்கலாம் என்பதற்கு தக்க அறிவுரையும் தரப்பட்டுள்ளது. திருமண பந்தத்தில் இணக்கமின்றி அவதிப்படுவோர், தங்கள் வேதனைகளை புரிந்து தீர்த்துக்கொள்ள தனித்துவமான அறிவுரைகள் உள்ளன. ஆண் – பெண் மனநலம் பேணவும், நெருக்கடிகளின் போது சுமுக நிலையில் ஆரோக்கியமான முடிவுகள் எடுக்கவும் ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன. திருமண பந்தத்தில் இணைய விரும்புவோருக்கும் நல்ல ஆலோசனைகள் சொல்லப் பட்டுள்ளன. திருமணத்துக்கு பின் ஏற்படும் முரண்பாடு, ஒவ்வாமைக்கு உரிய அடிப்படை காரணங்கள் குறித்து அலசி ஆராய்ந்து, அவற்றை விலக்கும் வழிமுறைகளை முன்வைக்கிறது. மனப்போக்கின் அடிப்படையை அறிந்துகொள்ளும் எடுத்துக்காட்டுகள் முன் வைக்கப் பட்டுள்ளன. தம்பதியருக்குள் ஏற்படும் முரண்பாடுகளை களைந்து சுமுகமாக வாழ வழி காட்டுகிறது. திருமண வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்து முன்னேற விரும்புவோருக்கான உளவியல் வழிகாட்டி நுால். – சிவா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்