Advertisement

பார்த்தது, கேட்டது, படித்தது  பாகம் – 14

₹ 320

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைக்கு திரும்பிய பக்கம் எல்லாம், 18 வயது நிறையாத பதின்பருவ பெண் குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு ஆளாவதையும், சம்பந்தப்பட்டவர்கள், ‘போக்சோ’ சட்டத்தில் கைதாவதையும் பார்த்து, படித்து திகைத்துப் போய்க் கொண்டு இருக்கிறோம்.ஆனால், இதெல்லாம் இந்த இன்டர்நெட் யுகத்தில் நடக்கத் தான் செய்யும்;பெற்றோர் தான் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று, 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுத்து, அந்துமணி தன் பா.கே.ப.,வில் எழுதியுள்ளார்.@subtitle@ ‘குட் டச், பேட் டச்’@@subtitle@@‘எந்த உறுப்பும் மர்ம உறுப்பு கிடையாது; எல்லா உறுப்புகள் பற்றியும் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். சொந்த மாமா, சித்தப்பாவாக இருந்தாலும், எல்லை மீற அனுமதிக்காதீர்கள். ‘குட் டச், பேட் டச்’ பாடத்தை முதலில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். இந்தியாவில் மட்டும் இந்த சி.எஸ்.ஏ., – சைல்டு செக்ஸ் அபுயுஸ் என்ற கொடுமையின் கீழ், 20 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்...’ என்று ஆரம்பித்து, பெற்றோருக்கு ஒரு விழிப்புணர்வு பிரசாரமே செய்துள்ளார் அந்துமணி. அந்துமணியின் அட்வைஸ்கள் அன்றைய தேதியை விட, இன்றைய காலகட்டத்துக்கு மிக அவசிய தேவையாகவே உள்ளன. அப்போது படிக்காவிட்டாலும், இப்போதாவது இந்த புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்; உங்கள் பிள்ளைகளிடம் படிக்க கொடுத்து விழிப்புணர்வு அடையச் செய்யுங்கள்.செல்லுார் சுந்தரம் என்றொரு எம்.ஜி. ஆர்., ரசிகர், எம்.ஜி.ஆர்., படம் வெளிவரும் போதெல்லாம், அந்த படத்தில் எம்.ஜி.ஆர்., என்ன கெட்டப்பில் இருந்தாரோ, அந்த கெட்டப்பை தன் உடம்பில் பச்சை குத்திக் கொள்வது இவரது வழக்கம். @subtitle@ பலத்த வரவேற்பு @@subtitle@@இவரைப் பற்றி கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., இவரை நேரில் வரவழைத்து, ‘உனக்கு என்ன வேண்டும் கேள்?’ என்று கேட்டபோது, ‘உங்கள் ரசிகன் என்ற அந்த ஒன்றே போதும்...’ என்று சொன்னவர், இவரைப் பற்றிய தகவலை தேடிப் பிடித்து படத்துடன் வெளியிட்டுள்ளார் அந்துமணி. பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள், எப்படி எல்லாம் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என்பது பற்றிய அந்துமணியின் கடிதத்திற்கு, அடுத்த அடுத்த வாரங்களில் பெண் வாசகர்களிடம் இருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. பள்ளியில் மட்டுமல்ல; கல்லுாரியில், வேலை பார்க்கும் இடங்களில் என்று எப்படியெல்லாம் பெண்களுக்கு தொல்லைகள் வந்தன, வருகின்றன என்பதையும், அதில் இருந்து எப்படி தப்பினோம் என்பதையும் பல வாசகியர் எழுதியுள்ளனர். ‘பல காலமாக, நாங்கள் எங்கள் மனதில் பூட்டி வைத்திருந்த விஷயம் இது... எங்கே கொண்டு போய் எங்கள்மனச்சுமையை இறக்கி வைப்பது என்று காத்திருந்தோம். இப்போது தான், அதற்கு களமும், காலமும் கிடைத்துள்ளது...’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.வாசகியர் எழுதிய விஷயங்கள், பலருக்கும் விழிப்புணர்வை தரவேண்டும்; அதே நேரம் எழுதிய வாசகியருக்கு எவ்வித பாதிப்பும் வரக்கூடாது என்று யோசித்து, மிக அருமையாக இத்தகைய விஷயங்களை அந்துமணி கையாண்டு புத்தகத்தில் தொகுத்துள்ளார். பார்த்து, படித்து, பாதுகாக்க வேண்டி தகவல்கள் அவை!@subtitle@ படிக்கும் போதே கண்ணீர் வருகிறது@@subtitle@@வாசகியர் மட்டுமல்ல; வாசகர்கள் பலரும் இதுபோல தங்கள் சுமைகளை இறக்கியுள்ளனர். சிறுவயதிலேயே மரைன் ஆபீசராக இருந்து, நல்ல சம்பளம் வாங்கிய நான், எப்படி குடிக்கு அடிமையாகி, வேலையையும், மதிப்பையும் இழந்த தன் வரலாறைச் சொல்லி, ‘குடியின் பக்கமே யாரும் போய் விடாதீர்கள்...’ என்று உருக்கமாக தெரிவிக்கிறார், ஒரு வாசகர். படிக்கும் போதே கண்ணீர் வருகிறது.வாசிக்கும் பழக்கம் அதிகம் உள்ள அந்துமணி, தான் படித்த குறுக்குத்துறை என்ற புத்தகத்தை பற்றி தந்துள்ள குறிப்புகளை படித்து, சிரிக்காமல் இருக்க முடியாது. அதே போல அன்றாட உடற்பயிற்சி குறித்த கட்டுரையை, ‘சீரியஸ் சப்ஜெக்ட்’ என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால், கண்ணில் நீர் வரும் வரை சிரிப்பு தொற்றிக் கொள்கிறது.@subtitle@ நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது@@subtitle@@அந்துமணிக்கு கார் முதல், துடுப்பு படகு வரை மிக லாவகமாக இயக்குவார்; திடீரென்று, அவருக்கு குதிரை ஓட்டவேண்டும் என்ற ஆசை வந்துவிடுகிறது. அந்த அனுபவங்களை, நகைச்சுவையாக தந்துள்ளார். அதைப் படித்து விட்டு குதிரை ஓட்டப்போவது மேல்! ஆவியுடன் பேசிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த இவரது நண்பர் ஒருவரின் அனுபவமும் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது!சென்னையில் இருப்பவர்கள் எத்திராஜ் மகளிர் கல்லுாரியை பலமுறை கடந்து சென்றிருப்பர்; ஆனால், யார் இந்த எத்திராஜ் என்பது பற்றி எப்போதாவது விசாரித்திருப்பரே என்றால், இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். அந்த கல்லுாரியில் மகள்களை சேர்த்த அப்பாக்கள் கூட, இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்துமணி விலாவாரியாக விசாரித்து, வழக்கறிஞரான அவரைப் பற்றி படத்துடன் எழுதியுள்ளார். அவர் மீது மட்டுமல்ல; இப்போது, அந்த கல்லுாரியை கடந்து செல்லும் போது, அந்த கல்லுாரியின் மீதே பெருமை எழுகிறது.@subtitle@ சுவாரசியமாக இருக்கிறது@@subtitle@@வீட்டில், மீன் குஞ்சு வளர்ப்பது எப்படி என்றும், ரோலக்ஸ் வாட்ச்சின் மகத்துவம், ஐஸ்கிரீம் வந்த விதம், கேரளாவின் பிரபலமான ‘ஒட்டந்துள்ளல்’ நடனம், ருத்ராட்சம், உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் கார்ஷ், காந்தி குல்லா உருவான விதம் என்று நிறைய நிறைய தகவல்கள் தந்துள்ளார்; படிக்க சுவாரசியமாக இருக்கிறது.எளிமையான வாழ்க்கையே, இனிமையான வாழ்க்கை என்று எப்போதும் சொல்லக் கூடிய அந்துமணி, தன் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலரது வாழ்க்கையை சொல்லியுள்ளார்; படிக்கும் போது, ‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூர் போலாகுமா?’ என்று பாடத் தோன்றுகிறது.எப்போதுமே, அந்தந்த வாரத்திற்கான மேட்டரை, அந்தந்த வாரத்திலேயே முடித்துக் கொள்ளும் அந்துமணி, கோபாலகிருஷ்ணன் என்ற மாற்றுப் பெயருடன் இடம் பெற்றுள்ள இளைஞரின் காதல் கதையை, பெற்றோர் விழிப்புணர்வு பெறவேண்டி, நான்கு வாரத்திற்கு ஒரு தொடர் போல எழுதியுள்ளார்.@subtitle@ தகவல்களும் பயனுள்ளவை@@subtitle@@இந்த தொடர் வந்த போது, மீதத்தை அடுத்த வாரம் சொல்கிறேன் என்று சொல்லியிருப்பார்; அடுத்த வாரம் என்னவாக இருக்கும் என்று, ‘வாரமலர்’ படித்த வாசகர்கள், ஒரு வார காலம் விடை தெரியாமல் காத்திருந்தனர். இந்த புத்தகம் வாங்கும் வாசகர்களுக்கு, அந்த திக் திக் காத்திருப்பு தேவைப்படாது; காரணம், ஒரே மூச்சில் நான்கு வார தொடரையும் படித்து விடலாம் பாருங்கள்!இந்த புத்தகத்திற்கான விஷயங்கள் எழுதும் போதே, சில நாடுகளுக்கு போய் வந்திருக்கிறார்; அவற்றில், நார்வே நாடும் ஒன்று. அந்த நாடு பற்றிய விவரிப்பும், தகவல்களும் பயனுள்ளவையாகும்!மீண்டும் கோவிட், அதிகரிக்கும் உஷ்ணம் என்று பயமுறுத்தும் செய்திகளுக்கு நடுவே, நம்மை சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் வைத்திருக்கும் விதத்தில், கோடை மழையாக அந்துமணியின் பார்த்தது, கேட்டது, படித்தது – 14ம் பாகம் இப்போது புத்தகமாக வந்துள்ளது; வாசித்து பயன் பெறுங்கள்!– எல்.முருகராஜ்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


  • இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 112).புகழ் மிக்க இஸ்லாமியர் பெருமக்கள் வரலாறுகளிலிருந்து அவர்களது தூய்மை, மதிநுட்பம், வீரம், தியாகம், சகிப்புத்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மை போன்ற மிக உயரிய பண்புகளைப் பிரதிபலிக்கும் சம்பவங்களைக் கட்டுரை வடிவில் சுவையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.

  • விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சன்னை-02. (பக்கம்:222)ஜூனியர் விகடன் இதழில் ஜென்ராம் எழுதிய 47 செய்தி விமர்சனக் கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 196). இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படைத்த இவர், தனது படைப்பாற்றலையும் சமூக நலனுக்கே அர்ப்பணிக்கும் இயல்புடையவர் என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தனி மனிதன் உடல் சார்ந்த ஒழுக்கமும் மனம் சார்ந்த தூய்மையும் கொண்டு அறிவின் ஆற்றலைத் துணையாக ஏற்று வாழ வேண்டும் என்பதை, இந்த நூலில் உள்ள 25 கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கடவுள் மறுப்பாளர்களுக்கும்,"கடி தோச்சி மெல்ல' உணர்த்துகிறார். ஆன்மிகத்தை விளக்கிக் கூறுகையில், நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து கூற வேண்டும் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்ந்து இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்து விட்டால், சொல்ல முற்படும் ஆன்மிக கருத்துக்கள் நீர்த்துப் போய் விடக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது வழிபாட்டின் அருமையை வாழ்க்கையின் பெருமையை நாம் உணர்ந்து மகிழ்கிறோம்.

  • புதுச்சேரி வரலாற்று சங்கம், 86, ஈசுவரன் கோவில் தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 312).புதுச்சேரி, வரலாற்று நாயகர்கள், புலவர்கள், இலக்கியம், காரைக்கால், ஏனாம், சந்திரநாகூர், என்ற தலைப்புகளில் ஆற்றிய பேருரைகள் 52 கட்டுரைகளாக இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்தும் மணி மணியான கட்டுரைகள். ஆழ்ந்து வாசித்து அசை போட வேண்டியவை. குறிப்பாக "புதுவையில் பாரதி' என்ற கட்டுரையின் இறுதியில் "புதுவை அந்தப் பாட்டுப் பறவையை (பாரதி) பத்தாண்டுகள் பாதுகாத்துப் படைப்பிலக்கியம் பல படைக்கச் செய்தது. பறந்து சென்ற மூன்றாண்டுகளில் (பாரதி மீண்டும் தமிழகம் வந்து) அதன் சிறகொடித்துச் சாகடித்து தமிழ்நாடு' என்ற வரிகள் தமிழர் நெஞ்சை கனக்கச் செய்யும்.

  • ஜைன இளைஞர் மன்றம், 5, தெற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 190)."சமண சமயம் தமிழகத்தில் சிறப்புற்று முன்பு விளங்கியது. அரசியலில் மட்டும் அன்று; கல்வித் துறையிலும் அறிவுத் துறையிலும் தான். சமணர் காலமே தமிழ் நாகரிகத்தின் பொற்காலம் என்று மொழி அறிஞர் கால்டுவெல் கூறியுள்ளதை இந்த நூல் ஆதாரங்களுடன் நிரூபிக்கிறது.கொல்லாமை, புலால் மறுத்தல், பிறரைத் துன்புறுத் தாமை, சமூக சமத்துவம், பெண் சமத்துவம், சமய சகிப்பு, கல்வி வளர்ச்சி, தமிழ் இலக்கிய இலக்கண வளர்ச்சி ஆகிய இந்தத் தடங்களில் தமிழகத்தை 2000 ஆண்டுகளுக்கு முன் முன்னேற்றியது சமணம் என்பதை இந்நூலின் கட்டுரைகள் சான்றுகளுடன் சாதிக்கின்றன.சிந்து சமவெளி நாகரிகம் சமணமே என்றும், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, நீலகேசி முதலிய தமிழ் இலக்கியங்கள் சமண இலக்கியங்களே என்றும் உறுதி செய்கிறார். எண்குணத்தான், ஐந்து அவித்தான், இருள் சேர் இருவினை, போன்ற குறள் பகுதிகளுக்குச் சமணத்திலிருந்து விளக்கம் தந்துள்ளார்.பள்ளிக்கூடம் என்று இன்றும் நாம் அழைக்கும் கல்விச் சாலையின் பெயரை தந்தது சமணம். சைன மதத் துறவியர் இருந்த இடமே "பள்ளிகள்' என்று அழைக்கப்பட்டன. அங்கிருந்து அவர்கள் கல்வி தானம் செய்ததால் தமிழ்ப் பள்ளி என்று அழைக்கப்பட்டிருந்தது. சமணராகிய தமிழ் ஜைனர்களின் மதச் சடங்குகள், கலை வளர்ச்சிகள், பண்பாடு ஒழுக்கங்கள், இவை இன்று நம் கண் முன் வாழும் வடநாட்டு வட்டி வாங்கும் சேட்டுகளாகிய ஜெயின்களிடமிருந்து மாறுபட்டது. தமிழுக்கே உரித்தான தமிழ்ச் சமணத்தின் பழமையும், பெருமையும் இந்த நூலைப் படித்தால் உணர்ந்து போற்றலாம்.

  • கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017.

  • தமிழாய்வு: கடந்த காலமும் வருங்காலமும் என்னும் பொதுப் பொருளில் நிகழ்ந்த முதன் பன்னாட்டுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. (ஒவ்வொன்றும் 256 பக்கங்கள். ஒவ்வொன்றும் விலை ரூ.80) மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம்-608 001.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை ஆய்வு மாணவர்கள் ஒருங்கிணைந்து நிறுவியுள்ள கல்விசார் அமைப்பு தமிழாய்வு மன்றம், பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் கருத்தரங்கக் கட்டுரைகள். அவற்றைத் தொகுத்து "ஆய்வுகளாக ஐந்து தொகுதிகளாக உருப் பெற்றிருக்கிறது.தமிழிலும் ஆங்கிலத்திலும் 460 ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. எல்லா தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகளை அளித்து அசத்தி விட்டனர் ஆய்வாளர்கள்.சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை மாணவர்கள் பன்னாட்டு மாணவர்களைக் கொண்டு மாணாக்கர்களுக்கு நடத்தும் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கில் ஒளிவீசும் மணிக் கதிர்களின் அணிவகுப்பாக அழகுற வருகிறது இந்த ஆய்வுக்கதிர்- என சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் பேராசிரியர் வ.ஜெயதேவனால் பாராட்டப் பெற்ற தொகுதிகள் இவை.இத்தொகுதிகள் ஆய்வுக் கடல். அனைவரும் இத்தொகுதியில் மூழ்கி முத்தெடுக்கலாம்.

  • நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 192).பத்திரிகையில் தொடராக எழுதிய 39 கட்டுரையின் தொகுப்பு தான் இந்த நூல். உலக இலக்கியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு அவை கட்டுரையாக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர் அப்துல்காதர் பேச்சாளர் என்பதால் அவரையும் அறியாமல் எழுத்து நடையை விட பேச்சு நடை கைகொடுத்திருப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் நூலாசிரியர் கொடுத்திருக்கும் தலைப்புகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.அன்பே! அந்தக் கொசுவினைச்சாகடித்து விடாதே! அந்தக் கொசுமுதலில்உன்னைக் கடித்தது!

  • வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).பிரபல நாளேட்டில் நூலாசிரியர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தின் மிகச் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரான இந்தப் பேராசிரியரின் சொல்லாற்றல் நாம் அறிந்தது தான். ஆனால், எழுத்தாற்றலை இந்த நூல் மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். 24 கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர் தொடங்கி அம்ருதாபிரீதம் வரை, மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக மாறுவதைப் பற்றிய ஒரு வழி அனுப்பு உபசாரக் கட்டுரையில் ஆரம்பித்து வரி கட்டுவது சுமையா, சுகமா என்ற கேள்வியை எழுப்பி, விழிப்புணர்வு பிரசாரக் கட்டுரை வரை, பலதரப்பட்ட விஷயங்களை சுவைபட ஆசிரியர் எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரைகளில் உள்ளவைகளை ஆழ்ந்து படித்துப் பார்த்தால் நமக்கு இதுவரை தெரியாத பல விஷயங்களை ஆசிரியர் சுவைபட எடுத்துச் சொல்லியிருப்பதை உணர முடிகிறது. பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கிய சிறந்த புத்தகம்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • வேடர்கள் குலத்தில் உதித்து தங்கள் உறுதியான பக்தி நெறியால் பெரும் சாதனை படைத்த பன்னிருவரது வாழ்க்கை பற்றிய கட்டுரைகள் ஜாதி வேறுபாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் நூல்.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • தமிழ் புத்தகாலயம் - தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை - 17.

  • க.தி. அருள்மன்றம், வகுளமாலிகா, மாருதிநகர், மதுராந்தகம்-603306. (பக்கம்: 148)பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பாக உள்ள இந்நூலில், ராமாயணம் குறித்து பெரும்பாலான கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையின் தலைப்பே, நூலின் பெயராக விளங்குகிறது. பேச்சாற்றல் மிக்க இந்நூலாசிரியர், தம் எழுத்தாற்றலையும் இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.கும்பகர்ணன் உறங்கவில்லை என்ற முதல் கட்டுரையில் "ஆசில் பரதாரம்' என்று தொடங்கும் கம்பரின் பாடலை நன்கு விளக்கியுள்ளதும் (பக்.2), கும்பகர்ணன், வீடணன் இருவரும் முறையே வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றவர்கள் என்று ஒப்பிடுவதும் (பக்.4). மூக்கில்லாத தவளும் இடையில்லாதவளும் என்ற கட்டுரையில் கம்பனின் நகைச்சுவையை விளக்குவதும் (பக்.32, 33), இராமபிரானின் சிறப்பை எண்ணி சீதை அழுவதை விளக்குவதும் (பக்.79), நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். படிக்கத்தக்க பயனுள்ள நூல்.

  • தமிழாய்வு மன்றம் எடுத்த இம்முயற்சி அமிழ்தினும் இனிய தமிழைப் பரப்பும் பணியாகும். ஆங்கிலக் கட்டுரைகள் இடம் பெறுவதையும் வரவேற்கும் செயல் உலகத்தோடு ஒட்ட ஒழுகலைப் படம் பிடிக்கிறது. அதனால் தான் தொல்காப்பியத்துச் செய்யுளியலில் உள்ள "நோக்கு' என்பதற்கு இளம்பூரணர் உரையை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார் போலும். திருக்குறள் மூல நூலை சிதைப்பதைச் சாடுகிறார் தமிழண்ணல். அக்கட்டுரைக்கு முத்தாய்ப்பாக சங்கம் வளர்த்த பெருங்கோமான் பாண்டியத்துரைத் தேவர் பண்பாடு இன்று எல்லாராலும் புரிந்து கொள்ள வேண்டிய தகவல். "துவக்கம்' என்ற சொல் சரியல்ல: "தொடக்கம் ' என்பதே இலக்கண வழக்கு என்று வினா -விடையில் தரப்பட்டிருக்கும் தகவல். ஆழமாக தமிழைக் கற்றுத் தெளிய விரும்பும் ஆர்வலர் அனைவரும் விரும்பி இந்த இதழைச் சுவைப்பர் என்பது நிச்சயம்.

  • வள்ளி சுந்தர் பதிப்பகம், எண்.84/14, மீர்பக்சிஅலி தெரு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 152). "கருவறையின் அதிர்வுகள்' துவங்கி, "இணைய வெளிப்பந்தலில்' ஈறாக சுமார் 16 இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இதில் அடக்கம். "மனித உடலின் வலப்பக்கம், இடப்பக்கம் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டாலும் அதை அந்த உடலின் ஊனம் என்றே கருதுகிறோம். அதுபோல சமுதாயத்தில் "ஆணும் பெண்ணும்' என்று "வெளிச்சத்துக்கு வராத வேதனைக் காட்சி'களைக் கண் முன் நிறுத்தும் இக்கட்டுரையாசிரியரின் "மும்பையில் தமிழ் இலக்கியம்,' "விழி தேடும் விடியல்கள்,' "தீக்குள் விரலை வைத்தால்' போன்ற விமர்சனக் கட்டுரைகள் இலக்கியங்கள் மீதும் அதையும் விஞ்சி சமுதாயத்தின் மீதும் அவர் கொண்டுள்ள நேயம் பற்றி பறை சாற்றுகின்றன. "புதிய மாதவி, அரபிக் கடலோரப் புயல்... அது காயப்படுத்தாது, நியாயப்படுத்தும், அவரது கோபமும் நியாயமானது தான்' என்ற மாலன் கூற்றில் உள்ள உண்மை இந்நூலை வாசிப்பவர்களுக்கு புலப்படும்.

  • விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-1. (பக்கம்: 136).அணில் கடித்த பழங்கள், மரபின் மைந்தன் முத்தையா கட்டுரையும், பஞ்சவடியின் நிழலில்... எம்.கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும், தென்காசியில் நடைபெற்ற டி.கே.சி., விழாவின் சிறப்பை விவரிக்கிறது. நாமும் விழாவில் கலந்து கொண்ட உணர்வு டி.கே.சி.,யின் சிவலிங்கம் இருந்த குறிப்பேட்டில் சைவ இலக்கியப் பாடல்களையும் சங்கு முத்திரை கொண்ட பக்கத்தில் வைணவ இலக்கியப் பாடல்களையும் காண முடிகிறது. அவர் சுவைத்த 116 பாடல்கள் நூலில் இடம் பெற்றுள்ளது. நாமும் சுவைத்து மகிழலாம்.

  • வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல். (பக்கம்: 112). சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இக்காலத்தில் இன்றியமையாதது. இதை 13 கட்டுரைகளாக இந்நூலில் காணலாம்.இயற்கையை காத்தல், கடலோடிகள், பாரம்பரிய தகவல்கள், கடல்சார் குறிப்புகள், கடல் பற்றிய மரபுவழி அறிவு, மீன் பிடிக்கும் முறைகள், முத்துக் குளித்தல், மீனவர் பெற வேண்டிய வளம் என ஆய்வு செய்து சொற்பொழிவாக நிகழ்த்திய கட்டுரைகள் கையடக்கப் பிரதியாக வந்துள்ளது.மீன்களின் விற்பனை, பதப்படுத்தும் முறைகள், இவை சார்ந்த பிரச்னைகள் என எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லும் அழகு வெகு அருமை! சிறு நூலில் சிறந்த தகவல்கள்.

  • வெளியிட்டோர் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் அஞ்சல் பெட்டி எண்.8780, அடையார், சென்னை-600 020. மரபியல் வழி வந்த பண்பாட்டுப் பொருள்களைச் சீர் செய்தல், பாதுகாத்தல் ஆகியன மிக நுணுக்கமான பணிகளாகக் கருதப்படுகின்றன. இந்தியா போன்ற தொன்மையான நாடுகளில் அகழ்ந்தெடுக்கப்படும் பண்பாட்டுப் பொருள்கள் மற்றும் மரபியல் சார்ந்த தொன்மையான பொருள்களைப் பற்றிய ஆய்வு வேண்டப்படுவதாகும். இவற்றின் மூலமாக அறியப்படும் வரலாறு, பொருளியல், கலை நுணுக்கம், தொழில் நுணுக்கங்கள் ஆகிய பண்பாட்டுக் கூறுகள் சிறப்பானவை. இப்பொருட்களைச் சீரமைத்தல், பாதுகாத்தல் மற்றும் அவற்றை முறையாகக் காட்சியில் அமைத்து காப்பு செய்தல் பண்பாட்டு ஆய்வாளர்கள் இடையேயும், அறிவியல் அறிஞர்களிடையேயும் முக்கியம் வாய்ந்த பயனீட்டுக் கல்வியாக மலர்ந்துள்ளது. இவ்வகையில், என்.ஹரிநாராயணா அவர்களின் இந்நூல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது கண்கூடு. இந்நூலை ஆக்கித் தந்தமைக்கு அவரையும், வெளியீட்டாளரையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்ட இந்நூலில், 46 ஆய்வுக் கட்டுரைகள் சுவையான ஆங்கிலத்தில் உள்ளன. அருங்காட்சியியல் பற்றிய அனைத்துச் செய்திகளும் முறையாகத் தரப்பட்டுள்ளன. அருங்காட்சியகங்களை அமைக்கும் முறைகள், அமைக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பன்னாடுகளில் அருங்காட்சியியலில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகிய பல பொருள்கள் பற்றிய முக்கிய செய்திகள் நிறைவாகத் தரப்பட்டுள்ளன.பண்பாட்டுப் பொருள்களைச் சீரமைத்தலில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வேதியியல் முறையில் சீரமைத்தல் தனிப் பிரிவாகும். வேதியியல் மேலறிவும், ஆர்வமும், பழம் பொருள் களின் தன்மை சிதைபடா வண்ணம் பாதுகாக்கும் எண்ணமும் முக்கியத் தேவைகள். சீரமைத்தலின் நுணுக்கங்கள் பற்றி விளக்கமாகவும், தெளிவாகவும் குறிப்புகள் உள்ளன. பண்பாட்டுப் பொருள்கள் சீரமைத்தலின் வரலாற்று ஆய்வும் இந்நூலில் உண்டு. சீரமைத்தலின் நோக்கங்கள், தேவைகள், சீரமைப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சி பற்றியும் இந்நூல் விளக்குகிறது. அருங்காட்சியக வேதியியல் அலுவலர்களின் தகுதிகள், முக்கிய பண்புகள், கடமைகள் ஆகிய விவரங்கள் மிகச் சிறந்த பயனளிக்கும். தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய துறை ஆய்வாளர் களுக்கும் வேதி யியல் சீரமைப்பு முறைகள் நன்கு தெரிய வேண்டும் என்று அறிவுறுத்துவது பாராட்டத் தக்கது.தானே முன்னின்று சீரமைத்த பணிகள் பலவற்றை விளக்கி யுள்ளது இந்நூலின் மற்றுமொரு முக்கிய சிறப்பாகும். தஞ்சாவூர் கோவில் பண்டைய ஓவியங் கள், மரச் சிற்பங்கள், பனை ஓலைச் சுவடிகள், செப்புப் படிமங்கள், காகிதப் பொருள்கள் மற்றும் ஓவியங்கள் ஆகிய தொன்மைப் பொருள்களைச் சீரமைத்த முறைகளை விளக்கியுள்ளது மிக்க பயனுள்ளதாகும். இத்துறையைச் சார்ந்த பலருக்கும் இம்முறைகள் பற்றிய தெளிவான அணுகுமுறைகளை இந்நூல் தந்துள்ளது. பழங்காலக் கோவில்கள், கட்டடங்கள் ஆகியவற்றை வேதியியல் முறைப்படி சீரமைத்தலும் பாதுகாத்தலும் நிரல்பட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டியில் கிடைத்த ஈயக்காசு களைச் சீரமைத்து காப்பு செய்யப்பட்ட முறையும் சொல்லப்பட்டுள்ளது. சீரமைப்புக்கு தேவையான முக்கிய வேதியியல் பொருள்களின் பட்டியல், அளவுகள் ஆகியன தந்துள்ளமை, இப்பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக் கும் ஏனைய பொது மக்களுக்கும் மிகத் துணை புரியும்.அருங்காட்சியியல் மற்றும் வேதியியல் சீரமைப்பு, காப்பியல் ஆகிய துறைகளில் பணியாற்றுவோரிடையே மிகவும் நன்கு அறிமுகமானவர் ஹரிநாராயணா. சிறந்த பயிற்சிகளைப் பெற்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்ததும், தொன்மையானதுமான சென்னை அருங்காட்சியகத்தில் 30 ஆண்டுகளுக்கு