/ கேள்வி - பதில் / 1008 தமிழ் வினா – விடை

₹ 175

போட்டித் தேர்வுகளில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையிலான நுால். தமிழ் இலக்கியத்தில் முக்கிய தகவல்கள் அடங்கிய கேள்வி – பதில்களாக அமைந்துள்ளது. எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றுக்கு விடை மிகச் சுருக்கமாக தரப்பட்டு உள்ளதால் நினைவில் பதிக்க ஏதுவாக இருக்கிறது. மற்றொரு பகுதி, சிந்தனையை துாண்டும் வண்ணம் உள்ளது. இலக்கிய வரலாறு மற்றும் அது காட்டும் மையக் கருத்தை புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இதில் தொகுத்துள்ள 1,008 கேள்வி களிலும் தமிழ் இலக்கியத்தின் முக்கிய கூறுகளையும், கருத்துகளையும் அறிந்து கெள்ள முடியும். சமஸ்கிருத ஆண்டுகளின் தமிழ் பெயரும் இறுதியில் தெளிவான பட்டியலாக தரப்பட்டுள்ளது. – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை