/ ஆன்மிகம் / 108 வைணவ திவ்ய தேசங்களின் வரலாறு
108 வைணவ திவ்ய தேசங்களின் வரலாறு
திவ்ய தேசங்கள் அமைந்துள்ள இடங்களை தொகுத்து தரும் நுால். திருமாலின் பெருமைகளை பரிபாடல் கொண்டு விளக்கம் தருகிறது. கோவிந்த நாமாவளி துவங்கி, திருப்பல்லாண்டு, நரசிம்மர் காயத்ரி, சுதர்சன மூலமந்திரம், சேது பரிகார ஸ்லோக தகவல்களை தருகிறது.சோழ நாட்டில் அமைந்துள்ள வைணவ நவக்கிரக திவ்ய தேசங்களை பட்டியலிட்டுள்ளது. பாண்டிய நாட்டில் நவ திருப்பதிகள் தரப்பட்டுள்ளன. திருமால் நின்ற, அமர்ந்த, சயனத் திருக்கோலங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. சென்னையில் பார்த்தனுக்கு சாரதியாய் விளங்கிய பெருமாள், மீசையுடன் காட்சி தருவதை குறித்துள்ளது. ஒவ்வொரு தலத்தையும் நேரில் காண்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் நுால்.– பேராசிரியர் இரா.நாராயணன்