/ கட்டுரைகள் / 200 அருமையான அறிவுரைகள்
200 அருமையான அறிவுரைகள்
அறிவூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் மிக எளிமையாக, ஒரு பக்க அளவில் வருமாறு எழுதப்பட்டுள்ளது. வாழ்வதற்கு தேவையான, 200 அறிவுரைகள் உள்ளன. எளிய உண்மைகளைப் புலப்படுத்துகின்றன. மனதில் பதியும் வகையில் கவனமாக எழுதப்பட்டுள்ளன. தாயிற் சிறந்த கோவில் இல்லை என்ற தலைப்பில் துவங்கி, வெறுப்பை உள்ளத்தில் வளர்க்காதே என்பது வரை அமைந்துள்ளன.நடைமுறை வாழ்வில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் அறிவுரையாக கூறப்பட்டுள்ளது. உயர்ந்த நெறிகளை உள்ளடக்கியுள்ளது. தகவல்களை நேரடியாக மனதில் பதியும்படி சொல்கிறது. உணவு மற்றும் அரிய கண்டுபிடிப்புகள் பற்றிய விபரங்களும் உள்ளன. அன்றாட வாழ்வில் பயன்படும் தகவல்களைக் கொண்டுள்ள நுால்.– ஒளி