/ மருத்துவம் / 50 மலர்களின் 200 மருத்துவ குணங்கள்
50 மலர்களின் 200 மருத்துவ குணங்கள்
எளிய மலர்களின் மருத்துவக் குணங்களைத் தொகுத்து அளித்துள்ள நால். நம் நாட்டு தாவரங்கள், விலங்கினங்கள் தனித்துவம் மிக்கவை; மலர்களுக்கு இருக்கின்ற சிறப்பும், மணமும், பண்புகளும் அமெரிக்கா, ஐரோப்பா கண்ட மலர்களுக்கு கிடையாது என உரைக்கிறது. மணத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் முல்லை, மல்லிகை, ரோஜா போன்ற மலர்களிலும் அற்புதமான மருத்துவ சிறப்புகள் இருப்பது விவரிக்கப்பட்டுள்ளது. எந்த நோய்களுக்கு எந்த மலர்கள் மருந்தாக பயன்படும். அதை மருந்தாக பக்குவப்படுத்தி பயன்படுத்துவது போன்ற விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எளிய பூக்களால் தயாரிக்கக் கூடிய மருந்து தீங்கற்றது; பக்கவிளைவற்றது என அறிவுரைக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்