/ கட்டுரைகள் / ஷேக்ஸ்பியர், மில்டன், மனோன்மணீயம் சுந்தரனார் படைப்புகளில் அபூர்வ ஒற்றுமை
ஷேக்ஸ்பியர், மில்டன், மனோன்மணீயம் சுந்தரனார் படைப்புகளில் அபூர்வ ஒற்றுமை
தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள நுால். ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கும், மனோன்மணீயத்திற்கும் இடையே ஒற்றுமை, வேற்றுமைகளைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது. ஜான் மில்டன் படைத்த சொர்க்க நீக்கம் காப்பியம் முன்னோடியாக கருதப்படுகிறது. அதில் இடம் பெறும் சாத்தானும் மனோன்மணீய குடிலனும் ஒரே பாத்திரங்கள் என நிறுவியுள்ளது.ஷேக்ஸ்பியர், மில்டன், மனோன்மணீயம் சுந்தரனார் வாழ்க்கை வரலாறு தனித்தனியே தரப்பட்டுள்ளது. ஒப்பியல் இலக்கிய நோக்கில் குறிப்பிடத்தக்க நுால்.– முகிலை ராசபாண்டியன்