/ வாழ்க்கை வரலாறு / ஏ டேல் ஆப் ஷேக்கன் பெயித் (ஆங்கிலம்)

₹ 793

இந்திய ராணுவத்தில், பிரிகேடியராக பணியாற்றிய நூலாசிரியர், தம் வாழ்க்கை வரலாற்றூடே, தம் பணிக்கால நிகழ்வுகளை தொகுத்து தந்துள்ளார். அதனால், இந்த நூல், தன் வரலாற்றின் ஒரு பகுதியாகவே கருதத்தக்கது. எனினும் தகவல்கள், அதிர்ச்சி தரத்தக்கவை.இருபத்தாறு தலைப்புகள் கொண்ட இந்த நூலில், ராணுவத்தில் பணிபுரியும் அதிகாரிகள், உறவினர்களுக்கு காட்டும் சலுகைகள், நேரு காலத்தில் இருந்தே வந்திருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.நேருவின் உறவினரான மேஜர் ஜெனரல் பிரிஜ் மோகன் கவுலுக்கு, நேரு காட்டிய சலுகையின் பேரில் கிடைத்த பதவி உயர்வு, விதிக்கு மாறான முறையில் செய்யப்பட்டது என்பதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.பிரிட்டிஷ் ஆட்சியில், சீக்கியர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் நிகழ்ந்த போர், அதில் மடிந்த தியாகிகள் (பக்.53–55), கே.சி.பந்த், ராணுவ அமைச்சராக இருந்த காலகட்டத்தில், நடந்த சீர்கேடுகள், லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி அமர்த்தல் (பக். 66–68), இலங்கையில் ஐ.பி.கே.எப்., செயல்பட்ட விதம், அது தொடர்பான ராஜீவின் செயல்பாடு, பிரபாகரன் பற்றிய தகவல், தமிழ் ஈழம் பற்றிய செய்திகளை தாங்கிய ஆங்கில நூலினை திருட்டுத்தனமாக வெளியிட்ட செய்திகள் (பக்.245,235,237) ஆகியவை, இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.இவை தவிர, நூலாசிரியர், முன்னாள் ராணுவ அமைச்சர் கே.சி.பந்த், ராணுவ துறை, ராணுவ தலைமையகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தது, தமக்கு முறையாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காததால், அதுகுறித்து வழக்கு தொடுத்தது, கவுகாத்தி நீதிமன்றம், உச்சநீதிமன்றம் (பக் 103–105, 147–149) இந்திய மற்றும் கிழக்கு மாநில பகுதியின் செய்தி துறை, பார்லிமென்ட் ஆகியவற்றால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் விரிவாக தெரிவித்துள்ளார்.இராம.குருநாதன்


முக்கிய வீடியோ