ஆடத்தெரியாத கடவுள்
பக்கம்: 400 அமரர், ரசிகமணி, டி.கே.சி.,யின் வட்டத்தொட்டி தமிழ் அபிமானிகளுக்கு வேடந்தாங்கல். அங்கு இளைப்பாறிய இலக்கியப் பறவைகளின் சிறகு, பல இடங்களுக்குப் பறந்து செல்ல ஊக்கம் கொடுத்தது, இந்த வ.தொட்டி. நீதிபதி. எஸ்.மகராஜனும் அங்கு இளைப்பாறியவர்கள்.தமிழிலக்கியத்தின் நீள, அகல, ஆழங்களை முற்றிலும் நன்கறிந்த இந்த சட்ட வல்லுனர், தன் சிறகுகளை விரிக்கிறார், நமக்காக. கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம், பாரதியின் பாடல்கள் என, தமிழ்த்தேன் குடிக்க நம்மை அழைத்துச் செல்கிறார். ஐந்து பகுதிகளாகப் பிரித்துத் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைத் தொகுதியில் நிறைய தகவல்கள். பெரியார், நாகம்மையாரை மணந்து கொள்ள முடிவு செய்துவிட்டு, ராஜாஜியை, (அப்போதைய கவர்னர் ஜெனரல்) திருவண்ணாமலையில் ஒரு ரயிலில் சந்தித்து ஆலோசனை கேட்ட போது, அருகிலிருந்தவர் ரசிகமணி டி.கே.சி., என்ற தகவல் தொடங்கி, பண்டிதமணி கதிரேசர் செட்டியார், கம்பன் விழாவில், டி.கே.சி.,யைத் தாக்கிப்பேசிய விவரம் வரை பல, சுவாரஸ்யமான இலக்கிய விஷயங்கள்.படிக்கலாம்; படித்துக் கொண்டேயிருக்கலாம்; படிக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒரு அருமையானகட்டுரைத்தொகுப்பு.