/ கதைகள் / அன்புடன் அந்தரங்கம், பாகம் 2

₹ 150

தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபாய் நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 208) தினமலர் வாரமலர் இதழில் வெளியான "அன்புடன் அந்தரங்கம் பகுதியின் தொகுப்பு இந்நூல். வாசகர்களின் பலவிதமான பிரச்னைகளும், அவற்றை அலசி, ஆராய்ந்து பிரச்னைகளுக்கு அனுராதாரமணன் கூறிய தீர்வுகளும் இந்த புத்தகத்தில் தொகுக்கப் பெற்றுள்ளன. முதல் பாகத்தை போன்றே, இந்த இரண்டாம் பாகமும் வித்தியாசமான பல பிரச்னைகளுடன் இருக்கிறது. "இப்படி எல்லாம் கூட பிரச்னைகள் உள்ளனவா...? என்று படிக்கும் நமக்கு கேள்வி எழும்போதே, அந்த பிரச்னைகளை கையாள்வது எப்படி என்பதை அனுராதா ரமணனின் எழுத்துகள் மூலம் அறிந்து தெளியலாம். வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்னைகளை கையாள்வதற்கு கற்றுத் தரும் ஒரு அற்புத பொக்கிஷம் அனுராதா ரமணனின் "அன்புடன் அந்தரங்கம்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை